2025 மே 01, வியாழக்கிழமை

'கிராமோதய' சுகாதார மையம் திறப்பு விழா

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏறாவூர் 04ஆம் குறிஞ்சியில் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார மையம் கட்டிடம் இன்று புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிராமத்துக்கோர் எழுச்சித்திட்டம் என்ற அடிப்படையில் யுனிசெப் நிறுவனத்தின் நிதியொதுக்கீட்டில் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி உனா மெக்கியுளி மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயளாலர் டாக்டர் எஸ். அமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது யுனிசெப் நிறுவனத்தினால் 10 தாதிமார்களுக்கு மோட்டார் சைக்கில்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .