2025 மே 01, வியாழக்கிழமை

காத்தான்குடியில் எரிபொருள் நிரப்பு நிலையம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்,ரி.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி பிரதேச மீனவர்களின் நன்மை கருதி காத்தான்குடி கடற்கரையில் எரிபொருள் நிரப்பு நிலையமொறு நேற்று புதன்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினால் 23 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் திறந்துவைத்தார்.

மீனவர்கள் மண்ணெண்ணெய், டீசல் ஆகியவற்றை  இந்த நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், எதிர்காலத்தில் படகுகளின் இறங்கு துறையொன்றை அமைக்க  உத்தேசித்துள்ளதாகவும்  தை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கடற்றொழில் திணைக்களப் பரிசோதகர்கள், மீனவச் சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .