2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரத்த பரிசோதனைக்காக சென்ற பெண்களை திட்டிய பெண் ஊழியருக்கு கண்டனம்

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தப் பரிசோதனைக்குச் செலலும் அரச நிறுவனங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்களை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் தகாத வார்த்தைகளால் திட்டியமை கண்டனத்துக்குரியதாகும்' என மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் மன்றத்தின் தலைவர் வ.கமலதாஸ்,

'சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அரச திணைக்களங்களில் கடமையாற்றும் பெண் உத்தியேகத்தர்கள் சிலர் மருத்துவ அறிக்கைக்கான இரத்தப்பரிசோதனையை மேற்கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த பரிசோதனைக்கான நிலையத்தில் கடமையாற்றிய உத்தியோகப் பெணணொருவர், பரிசோதனைக்காகச் சென்ற பெண் உத்தியோகத்தர்களை தகாத வார்த்தைகளால்; திட்டித் தீர்த்துள்ளார்.

இதனால் வீடு திரும்பிய குறித்த உத்தியோகத்தர்கள் என்னிடம் இது தொடர்பில் முறையிட்டனர்.

குறித்த வைத்தியசாலை அதிகாரி பெண்ணாக இருந்த போதும் இவ்வாறு பெண் உத்தியோகத்தர்களைத் திட்டியமையானது கண்டிக்கப்படவேண்டியது.

இவ்வாறான பெண் உத்தியோகத்தர்களே பெண்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் கரணமாக அமைகின்றனர். எனவே இந்த விடயம் குறித்து என்னுடைய கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .