2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெலிக்கந்தை குளத்தில் மூழ்கி ஒருவர் பலி

A.P.Mathan   / 2013 நவம்பர் 21 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்
 
வெலிக்கந்தையில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி மட்டக்களப்பு - ஊறணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை பலியாகியுள்ளார்.
 
இன்று காலை, மூன்று பேர் வெலிக்கந்தையில் உள்ள குளம் ஒன்றில் படகில் சென்றுகொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் நீந்தி தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஊறணி பேச்சியம்மன் ஆலய வீதியை சேர்ந்த ஜோர்ஜ் தனுசாந்த் (22 வயது) எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
உயிரிழந்தவரின் சடலம் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் மட்டக்களப்புக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
 
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிக்கந்தை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .