2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடலில் மூழ்கியவர்களை மீட்கச் சென்றவர் உயிரிழப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


கடலில் மூழ்கிய இருவரை மீட்பதற்காக சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, நாசிவன்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை அக்பர் பள்ளி வீதியைச் சேர்ந்த அல் ஹாபீஸ் மீராமுகைதீன் முஹம்மது பயாஸ் என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர், வியாழக்கிழமை (21) காலை குடும்பத்தாருடன் நாசிவன்தீவு கடற்கரைக்குச் குளிக்கச் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தங்களுடன் வந்த இருவர் நீரிழ் மூழ்கியதைக் கண்டு அவர்களைக் காப்பாற்றுவதற்கு இவர் முயற்சித்த சமயம் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மரண விசாரணைகளின் பின்னர் சடலம்  இன்று வெள்ளிக்கிழமை காலை  6  மணியளவில் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாழைச்சேனை குல்லியதுன் நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் இறுதி ஆண்டி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .