2025 மே 01, வியாழக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, போரதீவுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மிகவும் பின்தங்கிய மாணவர்கள் கல்வி பயிலும் மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மணவர்களுக்கே இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்.களுமுந்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் சி.சிவபாதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹற்றன் நெசனல் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் பி.றமணதாச, பட்டிருப்பு கல்வி வலயத்தின் நிர்வாக உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.உலககேஸ்பரம், உதவிக கல்விப் பணிப்பாளர் எஸ்.நாகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஹட்டன் நெசனல் வங்கியின் மட்டக்களப்பு கிளை முகாமையாளர் பி.றமணதாசவின் ஏற்பாட்டினால் 80 பாதணிகள், 400 அப்பியாசக் கொப்பிகள், 200 இற்கு மேற்பட்ட பேனைகள்; போன்ற கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது பாடசாலை மணவரகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .