2025 மே 01, வியாழக்கிழமை

வறுமையற்ற மாவட்டத்தினை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் திவிநெகும தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வறுமையற்ற மாவட்டத்தினை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் கீழ் மிகவும் பின்தங்கிய பிரதேசமான வவுணதீவு பிரதேசத்தில் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு மற்றும் சுவிடிஸ் கூட்டுறவு அபிவிருத்தி நிலையம் என்பனஇந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வவுணதீவில் மிகவும் வறுமை நிலையில் உள்ள மக்களைக்கொண்ட கற்பகக்கேணி கிராமம் தெரிவுசெய்யப்பட்டு அங்கு சேனைப்பயிர்ச்செய்கையினை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான சேனைப்பயிர்ச்செய்கைக்கான உள்ளீடுகள் வழங்கும் நிகழ்வு வவுணதீவு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி திருமதி ரதி அஜித்குமார், சுவிடிஸ் கூட்டுறவு நிலையத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் மயூரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு சேனை பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்காக கச்சான், உழுந்து, சோளம், கௌபி போன்ற விதைகள், விவசாய உற்பத்தி உபகரணங்கள், பயன்தரு மரக்கன்றுகள் உள்ளிட்ட பலவேறு பொருட்கள் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .