2025 மே 01, வியாழக்கிழமை

நெற்களஞ்சியசாலை அமைப்பதற்கு ஆட்சேபம்: த.தே.கூ

Kogilavani   / 2013 நவம்பர் 22 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்ணபுரம் கிராமத்துக்குள் அம்பாறை மாவட்டத்தின் உகன பிரதேச செயலாளர் பிரிவினால் நெற்களஞ்சியசாலை அமைக்கப்படுகின்றமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, அம்மாறை மாவட்டத்தின் எல்லை மீறிய செயற்பாடாகும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் (ஜனா), இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரைச் சந்தித்து இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், உடனடியாக இந்த நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்களஞ்சியசாலை அமைக்கும் நடவடிக்கையை நிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்வியடம் குறித்து கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா),

'அம்பாறை மாவட்டத்திலிருந்து 1.5 கிலோமீட்டரில் உள்ள கண்ணபுரம் பிரதேசத்தில் அம்பாறை மாவட்டத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிககையானது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே பிழையான சிந்தனைகள் ஏற்படுவதுடன், இனமுறுகலையும் ஏற்படுத்தும்.

இதுபோன்ற செயற்பாடுகளின் தொடர்ச்சியாக இப்பிரதேசத்தினை அம்பாறை மாவட்டத்தின் நிர்வாகத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் இது போன்ற நடவடிக்கைகள் நிர்வாகம் சார்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றமையை இப்போது காணமுடிகிறது. ஏற்கனவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசங்களில் நுழைந்து மேய்ச்சல்தரைகளில் விவசாயம் மேற்கொள்கின்ற பிரச்சினை நடைபெற்று வருகின்றது.

அந்தப்பிரச்சினை தீர்க்கப்படாத வேளையில் இப்போது, நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலை உகன பிரதேச செயலாளர் பிரிவினால் அபிவிருத்தித்திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது இது ஒரு கண்டிக்கத்தக்கதொரு நிர்வாக எல்லை மீறலாகும்' எனத் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .