2025 மே 01, வியாழக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் சோளம் விதைப்பு ஆரம்பம்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான உப-உணவு பயிர்ச்செய்கையான சோளம் பயிர்ச்செய்கையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வடக்கு-கிழக்கு பருவ பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் இக்காலத்தில் பெரும் போக நெற்செய்கைக்கு அமைவாக இம்மாவட்டத்தில் சோளம் செய்கை பண்ணப்படுவது வழக்கமாகும்.

கடந்த காலங்களைவிட இம்முறை அதிகமான மக்கள் சோளச்செய்கையில் ஆர்வம் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது. சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை சோளச்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாவட்ட விவசாய திணைககள உதிவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, செங்கலடி, கிரான் மற்றும் வாகரை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளிலேயே அதிகமாக சோளம் பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சிறு போகத்தின் போது செய்கை பண்ணப்பட்ட சோளம் தற்போது அறுவடை செய்யப்பட்டு பொதுச்சந்தைகளிலும் தெருவோரங்களிலும் விற்பனை செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .