2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாவட்டச் செயலாளரின் வாக்குறுதியை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'மட்டக்களப்பு, கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்தில் கடந்த 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட 1647 காணி அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் உரியவர்களுக்கு அவர்களது வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் நிச்சயம் கையளிக்கப்படும் என்றும் கோறளைப்பற்று மத்தியில் இடம்பெற்ற காணி மோசடிகள் தொடர்பிலும்; உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்றும் மாவட்டச் செயலாளர் பி.எம்.எஸ்.சாள்ஸ் அளித்த வாக்குறுதியை அடுத்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் பிரதேச பொதுமக்களால் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்திலிருந்து 1647 காணி அனுமதிப்பத்திரங்களை கடந்த 22ஆம் திகதி மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் கைப்பற்றியதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணி அனுமதிப்பத்திரங்களை வழங்காமல் இருந்த பிரதேச செயலாளர்கள்; (கோறளைப்பற்று மத்தி, மேற்கு) வேண்டாம் என்றும் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை உடனடியாக வழங்குமாறும் கோரியும் திங்கட்கிழமை (3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள ஓட்டமாவடி, காவத்தமுனை, மாஞ்சோலை, பதுரியா நகர், நாவலடி போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து, பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த மாவட்டச் செயலாளர் பி.எம்.எஸ்.சாள்ஸ் மேற்படி வாக்குறுதியை அளித்ததுடன் பிரதேச செயலாளர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார். 



You May Also Like

  Comments - 0

  • Kamila Nawalady Monday, 03 February 2014 12:49 PM

    இந்த செய்தி கோரளை பற்று மேற்கு பிரதேச‌ செயலாளர் அன்சாருக்கும் கோரளை பற்று மத்தி பிரதேச‌ செயலாலளர் நிஹாராவுக்கும் எதிரானது. ஏன் எனில் இவ்விருவரும் ஒரே மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .