2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவோம்' எனும் தலைப்பில் செயலமர்வு

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவோம்" எனும் தலைப்பிலான ஒரு நாள் செயலமர்வொன்றை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி  காத்தான்குடியில் நடத்த தீர்மானித்துள்ளது.

இந்த பயிற்சி பட்டறையில் கல்விப் பொதுத் தராதர உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களும் பரீட்சை எழுதிய மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும் என போரத்தின் பொதுச் செயலாளர் எஸ்.எம்.எம்.முஸ்தபா மௌலவி தெரிவித்தார்.

இப்பயிற்சி பட்டறை முழு நாளும் இடம்பெறுவதுடன் இதில் கலந்துகொள்ளுபவர்களுக்கு சாண்றிதழும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தமது முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை குறிப்பிட்டு தபாலில்  பொதுச் செயலாளர், காத்தான்குடி மீடியா போரம், இலக்கம் 49, கடற்கரை வீதி காத்தான்குடி.03 எனும் முகவரிக்கு எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக அனுப்பி வைக்குமாறு காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்துள்ளார்.

தெரிவுசெய்யப்படுகின்ற 50 பேர் மாத்திரமே இந்த பயிற்சி பட்டறையில் கலந்துகொள்வர் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X