2025 மே 03, சனிக்கிழமை

சட்டவிரோத மின்சாரம் பெற்ற இருவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட  இருவரையும் சரீரப்பிணையில் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனி ஜுட்சன் விடுவித்தார். 

இவர்களை  நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25)   ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு விடுவித்தார். 

தனது வீட்டு மின்மானியின் சுய இயங்கியல் முறையை மாற்றி அதை மெதுவாக இயங்கச்செய்து  சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில்; சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை  செவ்வாய்க்கிழமை (25) கைதுசெய்ததாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, மின்கம்பியை பிரதான மின் விநியோகக் கம்பியில் கொழுவி மின்மாற்றிக்குச் செல்லவிடாது நேரடியாக வீட்டுக்கு மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டில் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் செவ்வாய்க்கிழமை (25) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

கொழும்பிலிருந்து வந்த இலங்கை மின்சார சபை அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து  நற்பிட்டிமுனை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி இவர்களது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X