2025 மே 03, சனிக்கிழமை

யாழ். பல்கலை மாணவி மட்டக்களப்பில் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன், வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்; 110 பி கிராமத்தில்  பாம்பு தீண்டியதாக சந்தேகிக்கப்படும் யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் வியாழக்கிழமை (27) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.    

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே  இவர் உயிரிழந்துள்ளதாக வும் அவர் கூறினார்.

இவரின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X