2025 மே 03, சனிக்கிழமை

வெல்லாவெளியில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி கிராமத்தினுள் வியாழக்கிழமை (27) 04 காட்டு யானைகள் புகுந்து  அட்டகாசம் புரிந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இதனால் தாங்கள் அல்லோலகல்லோலப்பட்டதாகவும் அப்பிரதேசவாசிகள் கூறினர். 

இந்த யானைகள் பிரதேச செயலக வீதியிலுள்ள வீடொன்றை  சேதப்படுத்தி,  சொத்துக்கும்; சேதம் விளைவித்ததாக வெல்லாவெளி கிராம அலுவலகர்  க.இராகுலன் தெரிவித்தார்.

சிவராத்திரிக்காக இவ்வீட்டிலுள்ளவர்கள்  கோவிலுக்குச் சென்றிருந்தபோது, இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. இதன்போது, 25 நெல்மூடைகளை சேதப்படுத்தியுள்ளன.  சுமார் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த யானைகளை  தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசுகள் கொழுத்தியும் சத்தமிட்டும் அங்கிருந்து யானைகளை கிராம மக்கள் கலைத்ததாக பிரதேசவாசிகள் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X