2025 மே 03, சனிக்கிழமை

ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில் மார்க்க கல்வியினை முடித்துக் கொண்ட மௌலவி-ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று (27) இடம் பெற்றது.

காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்வின் முதல்வர் மௌலானா மௌலவி எம்.ஏ.அப்துல்லாஹ்(றஹ்மானி) 'ஷைகுல்பலாஹ்' அவர்களின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் போது காத்தான்குடி, வாழைச்சேனையை சேர்ந்த ஏழு மாணவர்கள் மௌலவிகளாக பட்டம் பெற்றனர். மேலும் ஒன்பது மாணவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களாக பட்டம் பெற்றனர்.

உள்ளுர், வெளியுர் அரசியல் பிரமுகர்கள், புத்தி ஜீவிகள், மார்க்க அறிஞர்கள், உலமாக்கள் சம்மேளன உறுப்பினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X