2025 மே 03, சனிக்கிழமை

வாவி முகாமைத்துவம் தொடர்பான பங்குதாரர் விழிப்புணர்வு கூட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இலங்கையின் நீண்ட வாவியான மட்டக்களப்பு வாவியினை புனரமைத்து மீன் இனத்தின் பெருக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் வாவியினை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாவி முகாமைத்துவம் தொடர்பான பங்குதாரர் விழிப்புணர்வு கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்;பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவராஜா, பொருளாதார அபிவிருத்தி  செயலாளர் கே.புவனேந்திரன், எஸ்.தில்லைநாதன், கே.தவராசா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி மூலம் பொருளாதாரத்தில் அதிக வருமானம் கிடைக்கின்றது. மீன்பிடி தொழிலை விருத்தி செய்து வருமானத்தினை ஈட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போது மீன் பிடித்துறையினை வளர்க்கும் முகமாக பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.

ஒருவகையான கண்டல் தாவரமான கிண்னை மரத்தில் இருந்து ஒரு தொன் மீன்கள் உருவாகின்றன. எனவே இவ்வாறான தாவரங்களினை அழிப்பதனை தடுக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறான தாவரங்கள் வலையறவு, திமிலை தீவு ஆகிய இடங்களில் கூடுதலாக அழிக்கப்படுவதாகவும் முதற்கட்டமாக திமிலைதீவினை தெரிவு செய்து அந்த இடங்களில் தாவரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதன் கீழ்  திமிலைதீவு கிராமசேவையாளர் மற்றும் சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இது தெரடர்பான  விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் திமிலைதீவு வாவிக்கரைகளில் கண்டல் தாவரங்களை நடவிருப்பதாகவும் இத்திட்டம் குறைந்த செலவிலும் மக்களின் பங்களிப்புடனும் நீண்ட காலத்தையும் கொண்டதாக இருக்கும் எனவும் இதனுடைய பலன்  ஐந்து அல்லது பத்து வருடங்களின் பின்பே தென்படும் எனவும் இதன் பின்னர் மட்டக்களப்பு வாவிக்கரை நிர்மாணம் செய்யப்படும் எனவும் இங்கு கருத்துரை வழங்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X