2025 மே 03, சனிக்கிழமை

மூவருக்கு முச்சக்கரவண்டிகள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி மற்றும் பட்டிப்பளை பிரதேசங்களிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகளில் ஈடுபடுகின்ற 03 பேருக்கு வெள்ளிக்கிழமை (28)  முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் ஈடுபட்டுள்ள இவர்கள் தங்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு வசதியாக,  ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரதேசங்களில் சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துகத்துடன் இணைந்து அக்டட் அமைப்பு முன்னெடுக்கின்றது. 

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமூக உந்துதல் அபிவிருத்தி மற்றும் வறியோர் ஆதரவு பொருளாதார அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  மட்டக்களப்பு,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அக்டட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.ஹஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X