2025 மே 03, சனிக்கிழமை

ஈரோ தோட்டம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் 'வீடு செழித்தால் நாடு செழிக்கும்' எனும் தொனிப்பொருளில் நவீன முறையில் காலத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள வீட்டுத் தேவைக்கான மரக்கறி மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்யும் ஈரோ கார்டின்ஸ் நிறுவனத்தின் ஈரோ தோட்டத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சனிக்கிழமை (01) திறந்துவைத்தார்.

இதன்போது கத்தரிக்காய், தக்காளி, கறிமிளகாய் உள்ளிட்ட  மரக்கறிகள் அறுவடை செய்யப்பட்டன.

ஈரோ கார்டின்ஸ் வீட்டுத்தோட்ட உரிமையாளர் ஏ.பி.எம்.சப்ரிக்கு 100,000 ரூபாவை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அன்பளிப்புச் செய்தார்.

இந்த திறப்பு விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  சிப்லி பாரூக், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், காத்தான்குடி நகரசபையின் முன்னாள்  தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X