2025 மே 03, சனிக்கிழமை

கர்ப்பிணியான இளம்பெண் படுகொலை; கைதான மாமனுக்கு விளக்க மறியல்

A.P.Mathan   / 2014 மார்ச் 06 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கர்ப்பிணியான இளம்பெண்ணின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைது செய்யப்பட்ட சந்தேக நபரான மாமனுக்கு விளக்க மறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஏறாவூர் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொம்மாதுறைக் கிராம வாசியான சுதாசங்கர் ஜனனி (வயது 18) என்பவர் படுகொலை செய்யப்பட்டு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள உறுகாமம் - கித்துள் காட்டில் போடப்பட்டிருந்தார்.

இக்கொலை தொடர்பாக தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வந்த கரடியனாறு பொலிஸார், கொல்லப்பட்ட பெண்ணின் மாமன் முறையான ஏ.சின்னத்தம்பி என்பவரை வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகநேரிப் பகுதியில் வைத்து திங்களன்று (03) கைது செய்திருந்தனர்.

சந்தேகநபரை பொலிஸார், நேற்று (05) ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரை சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X