2025 மே 03, சனிக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2014 மார்ச் 11 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, ஜி.வி.வைத்தியசாலை சந்தியில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயங்களுக்குள்ளானதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடியிலிருந்து நகரை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியை மோட்டார் சையிக்கிளொன்று முந்திசெல்ல முற்பட்டபோது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில், முச்சக்கர வண்டியின்  சாரதியும் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவரும்  காயமடைந்துள்ளனர். இவ்விபத்தின் காரணமாக 15 நிமிட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மட்டக்களப்பு  தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குணசேகர மற்றும் போக்குவரத்துப் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X