2025 மே 03, சனிக்கிழமை

தமிழர்களுக்கு தற்போது சிறந்த சூழல்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 12 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

தமிழ் மக்களுக்கு தற்போது சிறந்த சூழல் அமைந்துள்ளதாக மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இச்சூழலைப் பயன்படுத்தி இழந்த கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை  மீண்டும் பெற்று முன்னேற வேண்டுமெனவும் அவர் கூறினார்.

களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'தற்போது சுறுசுறுப்பாக விளையாட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். கல்வியை கற்றால்  தானாகவே பொருளாதாரம் வளச்சியடையும்.  தற்போதைய காலத்தில் இதன் மூலமாகவே தமிழர்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

இவ்விளையாட்டுப் போட்டியை பார்க்கும்போது பெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் கூடுதலாகவுள்ளது. இதை எண்ணி நான் சந்தோஷப்படுகிறேன். இ;ப்பங்களிப்பு தொடர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான்  பிள்ளைகள் கல்வியில் சிறந்த இலக்கை நோக்கி பயணித்து அந்த இலக்கை அடைவார்கள். அவ்வேளையில் எமது சமூகம் முன்னேற்றம் காணும்.

இப்பிள்ளைகளின்  விளையாட்டு விழாவைக் கண்டு இன்றைய நாளை  மகிழ்ச்சியான  நாளாக கருதுகிறேன். ஒரு பிள்ளை குடும்பத்திலிருக்கும்போது,  குடும்பம் சந்தோஷமடைகிறது. ஏழையாக இருக்கலாம். பணக்காரனாக இருக்கலாம்.  தாயின் வயிற்றில் பிள்ளை இருக்கின்றபோது, அப்பிள்ளை சிறந்த முறையில் பெரிய இடத்திற்கு வரவேண்டுமென்று எண்ணுகின்றாள். இதற்காக முதலில் பாடசலையில் பிள்ளை சேர்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பிள்ளைகளுக்கு சிறந்த அற்பணிப்புடன் ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். இருப்பினும், இன்று பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்களைப் பற்றி என்னிடம் பிழையாக பெற்றோர் கூறுகின்றனர். இதற்காக நான் கூறுவது என்னவென்றால், பாடசாலையை விட பிள்ளை உங்களிடம் தான் கூடுதலாக இருக்கிறது. எனவே, பிள்ளையின் வளர்ச்சியில் கூடுதலான பங்கு பெற்றோர்களிடமே உள்ளது.  நீங்களே உங்கள் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்களின் அறிமுக விழா இப்பாடசாலையில்  இடம்பெறுவதையிட்டு இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிபர், ஆசிரியர்கள், அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

இப்பாடசாலையின் விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்திற்காக 25 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 03  மாடி கட்டிடம் அமைப்பதற்கு முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபா  பெற்றுத்தருவேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X