2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2014 மார்ச் 12 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, எஸ்.பாக்கியநாதன், ஜவ்பர்கான், தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் சிலர் புதன்கிழமை (12) மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தை நடாத்தியது.

கடந்த 31.12.2011 ஆம் திகதி வெளியாகிய மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 117 பட்டதாரிகளை அரசாங்க வேலைவாய்ப்புக்ளுக்கு இதுவரை உள் வாங்கவில்லையனெவும் இவர்களுக்கு உடனடியாக அரசாங்கதொழில் வழங்க வேண்டுமெனக் கோரியுமே கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்திமுரளிதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரிடத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  கையளித்தனர்.

குறித்த மகஜரில், 'பல்கலைக்கழகங்களில் ஏற்பட்ட வேலை நிறுத்தங்கள் காரணமாக எமது பரீட்சை முடிவுகள் பிந்தி வெளியானதால் 31.12.2011ஆம் திகதி வெளியான பட்டதாரிகள் அரசாங்க தொழில் வாய்ப்பில் உள்வாங்கப்படவில்லை. எனவே 2011.12.31. அன்று வெளியான பட்டதாரிகளுக்கு அரசாங்க தொழில் வழங்க வேண்டும்' என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் எஸ்.கோபினாத்,
'31.12.2011ஆம் திகதி லெளியான பட்டதாரிகள் அரசாங்க தொழில் வாய்ப்பில் உள் வாங்கப்படவில்லை. ஆனால் 30.12.2011ஆம் திகதி வெளியான பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கப்பட்டுள்ளது. இதில் நாங்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளோம். இவற்றை கருத்திற் கொண்டு எங்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X