2025 மே 03, சனிக்கிழமை

விசேட விழிப்புணர்வு சுகாதார விழிப்புணர்வுச் செயலமர்வு

A.P.Mathan   / 2014 மார்ச் 13 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தேசிய சுகாதார வாரத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி கல்வி வலய துறைசார் அதிகாரிகளுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட விசேட விழிப்புணர்வு சுகாதார விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று (12) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிதரன் மற்றும் கோட்டக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறை சார் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

நடைமுறை வாழ்வில் அதிகாரிகள் சுகாதார செயற்பாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் மாணவர்களையும் அதனூடாகப் பெற்றோரையும் இறுதியில் ஒட்டு மொத்த சூழலையுமே சுத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் பேண முடியும் என அங்கு விளக்கமளித்த வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம் அஹமட்லெப்பை தெரிவித்தார்.

வெறுமனே சுகாதாரம் என்பது தான் மட்டும் பேணிக்கொள்வதல்ல அது தன்னைச் சார்ந்துள்ள சூழலையும் தூய்மையாக வைத்திருப்பதையே குறிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயத்தில் கல்வித் துறை சார்ந்தவர்கள் முன்னோடிகளான உதாரண புருஷர்களாகத் திகழ முடியும் என்றும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X