2025 மே 03, சனிக்கிழமை

பலவீனத்தை நிவர்த்திக்க கைக்கோருக்குமாறு அழைப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

யுத்தத்தால் நலிவடைந்த நாம் காணி விடயத்திலும் பலவீனம் அடைந்துள்ளோம். இப்பலவீனத்தை நிவர்த்தி செய்ய அனைத்து தமிழர்களையும் தயாராகுமாறு அறைகூவல் விடுக்கின்றேன் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவி;க்கப்பட்டுள்ளதாவது,
 
கடந்த மூன்று தசாப்பதகாலங்களில் எமது இனத்தின் விடுதலைக்காக கடுமையான போர்ச் சூழலை எதிர் கொண்ட சமூகம் என்ற வகையில் தமிழர் நாம்அரசியல், சமூக, பொருளாதார, காணி ,கல்வி,கலை,பண்பாட்டு ரீதியாக மிக மோசமான நிலையில் பாதிப்புக்களை எதிர்கொண்டு  பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம்.
 
இந்தப் பின்னடைவுகளும், பாதிப்புக்களும் எமது இனத்தின் இருப்பை இன்று கிழக்கில் கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
குறிப்பாக  மட்டக்களப்பு மாவட்டத்தில் காணிகள் தொடர்பாக 1985 ஆம் ஆண்டிற்குப்பின்  எமது பிரதேச செயலக எல்லைகளில் அதிகமாக  தமிழர்கள் வாழந்த காணிப்பகுதிகளை  தமிழர்களுக்கு  தெரியாமல்   ஒருசில முஸ்லீம் அரசியல் வாதிகளினால் முஸ்லீம் மக்களுக்கு  சார்பாக  மட்டும் காணிகளை உள்வாங்கி  பளைய எல்லைகளை மறுசீரமைத்து சுற்றுநிருபம், வர்த்தமானிப் பத்திரங்கள் தயாரித்துள்ளனர்;.இந்தவிடயங்கள் தற்சமையம்வெளிவரத்தொடங்கியதையடுத்து தமிழ்மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
   
வாகரை கிரான் செங்கலடி  வவுணதீவு பட்டிப்பளை பிரதேச எல்லைகளில் உள்ள தமிழர்கள்வாழும்பகுதிகளில் அரிகில் உள்ள  அரசகாணிகளை மாகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து   எல்லைப் பகுதி காணிகளை பிரதேசசெயலாளர்கள் கையாள்வதை    நிறுத்தி; இக்காணிகளை வெளிமாவட்ட சிங்களமக்களுக்கவழங்கதிட்டமிட்டுள்ளனர்.
 
கடந்த 2013 ஆம் ஆண்டு  1இல் 40 ஆயிரம் ஏக்கர் காணிகள்    மாவட்ட எல்லையில் உள்ள காடுகள் அடங்கிய காணிப்பகுதிகள் அனைத்தையும் வனவளப் பிரதேசமாக  வர்த்தமானி மூலம்  வனவளத்திணைக்களம் பிரகடனப் படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் எக்காணிகளும் இல்லை.
 
மாவட்ட எல்லைபகுதிகளில் உள்ள கால்நடைகள் மேய்சல் தரையாகப்பயன்படும் காணிகளை வெளிமாவட்ட சிங்கள மக்கள் விவசாயம் செய்ய பௌத்தகுருமார்கள் உட்பட ஒருசில பாதுகாப்புபடையினர் சேர்ந்து பிரித்துக்கொடுத்துவருகின்றனர். இதனால் மேய்சல்தரைக்கு காணிகள் இல்லை.
 
எனவே எமது மாவட்டத்தில் அரச காணிகள் தமிழர்களின்  பார்வைக்கு மட்டுமே  உள்ளன இம் மாவட்டத்தில் உள்ள காணிகளுக்கும் எமக்கும்  இங்குள்ள நிர்வாகத்திற்கும் சம்பந்தமில்லாத சூழ்நிலையை மத்தியஅரசு திட்டமிட்டு உருவாக்கியுள்ளது .
 
இவைமட்டமின்றி பின்வரும் காணிசம்பந்தமான பிரச்சினைகள் ஒருபக்கச்சார்பாக திட்டமிட்டு கையாளப்பட்டுள்ளன இதனால் தமழர்கள்  மத்தியில் குழப்பநிலை தோன்றியுள்ளன.
 
(1)மண்முனைப்பற்று (ஆரையம்பதி)பிரதேசசபை, பிரதேசசெயலகத்துக்கு உட்பட்ட  எல்லையில்,  காத்தான்குடி நகரசபை, பிரதேசசெயலகம் அத்து மீறி நிர்வாகம் செய்கின்றது.
 
(2)மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நொச்சிமுனை, நாவற்குடா கிழக்கு, மஞ்சந்தொடுவாய் மஞ்சந்தொடுவாய் தெற்கு  பிரிவுகளில் ஒருபகுதியை 1987ஆம் ஆண்டு காத்தான்குடி நகரசபையுடன் இணைத்து வர்த்தமானி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
 
(3)கோறளைபற்று (வாழைச்சேனை) பிரதேசசெயலாளர் பிரிவின் மீராவோடை தமிழ் பகுதி காணிகளில் பெரும்பகுதி ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. 
 
(4)பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவில் கச்சைக்கொடிசுவாமிமலை கிராமசேவையாளர் பகுதியில் இனப்பரம்பலை அதிகரிக்க சிங்களக் குடியேற்றம் செய்யப்படுகின்றன
 
(5)பட்டிப்பளை பிரதேசசெயலாளர் பிரிவு, செங்கலடி பிரதேசசெயலாளர் பிரிவு எல்லைப்பிரச்சினை வரையறை இல்லை. கெமுனுபுர, கெவிளியாமடு பகுதிக்கு எல்லை நிர்ணயம் சரியாக செய்யப்படவேண்டும்.
 
6)கோறளைமத்தி பிரதேசசெயலாளர் பிரிவிலிருந்து கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி, முறுத்தானை, வடமுனை, ஊத்துச்சேனை பகுதிக்குள்  அத்துமீறிய குடியேற்றம் நடக்கின்றன.
 
7)செங்கலடி  ஏறாவுர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட  மிச்நகர்,  மீராக்கேணி, ஐயங்கேணி முஸ்லிம் பகுதி ஆகிய மூன்று முஸ்லிம் கிராமங்கள் அங்கீகரிக்கப்படாத கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாக ஏறாவூர்நகர்  பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
 
(8)வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம உத்தியோகஸ்தர் பிரிவைச் சேர்ந்த ரிதிதென்ன, ஜெயந்தியாய ஆகிய கிராமங்கள் அங்கீரிக்கப்படாத கிராமஉத்தியோகஸ்தர் பிரிவாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவால் நிர்வகிக்கப்படுகின்றன.
 
(9) கிரான் பிரதேச செயலகத்திற்கு அப்பிரிவில் உள்ள கிராமங்களை இணைத்து தனியான பிரதேசசபை உருவாக்க பலமுயற்சிகள் எடுத்தும் தடைசெய்யப்பட்டவருகின்றன அமைக்கப்பட்ட குழுக்கள் இரண்டு தடவைகள் கலைக்கப்பட்டுள்ளது .
மேற்குறிப்பிட்டதவறான காணி விடயங்களை சீரமைப்பதற்கு தீர்பதற்கு பலஅதிகாரிகள் முயற்சிகள் எடுத்தும் அதிகாரமிக்க ஆளும் அரசியல்வாதிகள் சில அதிகாரிகளை முறைகேடாக பயன்படுத்ததயாராகவுள்ளதாக தெரியவருகின்றன.
 
எனவே இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு 26-07-2013 அன்று விரிவான கடிதம் அனுப்பியும் இதுவரையில் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X