2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மரம் முறிந்ததில் வீட்டின் கூரை சேதம்

Kogilavani   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேச்தில்  புதன்கிழமை அதிகாலை வீசிய சுழல் காற்றினால் இப்பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் கூரை சேதமடைந்துள்ளது.

புதன்கிழமை(19) அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், புதிய காத்தான்குடி சபீனா வீதியிலுள்ள எம்.அப்துல் அஸீஸ் என்பவரின் வீட்டின் மீதே அருகில் நின்ற தென்னை மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

இம்மரம் முறிந்து விழுந்த நேரம் வீட்டுக்குள் சிலர் துக்கத்திலிருந்துள்ளனர் எனினும் அவர்களுக்கு எதுவித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அப்பகுதி கிராம உத்தியோகத்தரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X