2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தனியாரின் காணியில் சடலத்தை புதைக்க முயற்சி

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை கிராமத்திலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் சடலமொன்றை புதைக்க எடுக்கப்பட்ட முயற்சியை அடுத்து ஏற்பட்ட பதற்றநிலை பொலிஸாரின் தலையீட்டினால் சுமூக நிலைக்கு கொண்டுவரப்பட்ட சம்பவமொன்று செவ்வாய்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

இதுபற்றி தகவலளித்த காத்தான்குடி பொலிஸார், பாலமுனைக் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமென கூறப்படும் காணி ஒன்றில் கோவில்குளம் பகுதியில் மரணித்த ஒருவரின் சடலமொன்றை அடக்கம் செய்வதற்கு சிலர் முற்பட்டனர்.

இதன்போது இது தனியாருக்கு சொந்தமான காணியெனவும் இதில் அடக்கம் செய்தால் அங்கு சமூகப் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை காணப்பட்டதால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இப்பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.

இதையடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா, குறித்த சடலத்தை தனியாருக்கு சொந்தமான காணியில் அடக்கம் செய்யமால் சேமக்காலையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பாக எதிர்வரும் 25ஆம் திகதி குறித்த காணி சொந்தக்காரரையும், சடலத்தை கொண்டு வந்த இருவரையும் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து சடலம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் அங்கு கூடி நின்ற பெருளமளவிலான பொதுமக்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தினால் இந்த பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலைமை தனிந்ததாக' தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் போது இந்த இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான லால் செனவிரட்ன, மற்றும் ஜெயந்த ரத்னாயக்க காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க ஆகியோர் விசாரணைகளை மேற் கொண்டதுடன் நிலைமையை சுமூகமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற் கொண்டுவருவதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X