2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மு.கா.வை வெளியேற்றும் எண்ணம் அரசுக்கு கிடையாது: நஸீர்

Menaka Mookandi   / 2014 மார்ச் 19 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எந்த காலத்திலும் அரசாங்கத்துக்கு துரோகம் செய்யப்போவதில்லை எனவும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென்ற நோக்கம் அந்த கட்சிக்கு கிடையாது என்றும் அக்கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்துக்கும் கிடையாது என கிழக்கு மாகாணசபை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் கல்லூ}ப்யின் காலாண்டு பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணம் அரசாயங்கத்துக்கும் கிடையாது, ஆகையினால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்' என அவர் குறிப்பிட்டார்.

'முஸ்லிம் காங்கிரஸின் நகர்வுகளை எவரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது, மக்கள் வெறுமனே முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிப்பதை விடுத்து சமகாலத் தேவை கருதி அரசாங்கத்தினை பலப்படுத்துவதன் அவசியம் எழுந்துள்ளது. அதற்கு முஸ்லிம்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X