2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

புன்னைக்குடாவில் கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குறுமண்வெளியில் புதன்கிழமை(19) மாலை கைக்குண்டொன்றை மீட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறுமண்வெளி காளி கோயில் வளவை மண்போட்டு நிரப்புவதற்காக பழுகாமத்திலிருந்து உழவு இயந்திரத்தில் ஏற்றிவரப்பட்ட மண் குவியலுக்குள் இந்தக் கைக்குண்டு காணப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

ஏற்றிவரப்பட்ட மண்ணை கோயில் வளவில் கொட்டிப் பரப்பிக் கொண்டிருந்த கைக்குண்டு இருப்பதை கண்ட ஆலய நிர்வாகத்தினர் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை மீட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X