2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

யானையின் அட்டகாசம்...

Kogilavani   / 2014 மார்ச் 20 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிண்ணயடி கிராமத்திற்குள் புதன்கிழமை (19)  இரவு புகுந்த யானை ஒன்று பிரதேசத்தின் பல பகுதிகளிலும் அட்டாகசம் புரிந்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இரவு பத்து மணியளவில் கிண்ணயடி ஆற்றினூடாக மக்கள் குடியிருப்புக்குள் புகுந்த யானை அரிசி ஆலை, வீடுகளில் உள்ள வேலிகள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளது.

கிண்ணயடி ஆற்றுக்கு அருகில் உள்ள முருக்கன்தீவு, பிறம்படித்தீவு போன்ற காட்டுப் பகுதிகளில் இருந்தே யானைகள்; குடியிருப்புக்குள் வருவதாக பிரதேச வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் சம்பந்தபட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X