2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூரில் கைக்குண்டு மீட்பு

Kanagaraj   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் கடற்கரையோரத்தில் புதன்கிழமை  மாலை கைக்குண்டொன்றை தாம் கண்டெடுத்து செயலிழக்கச் செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் கடற்கரையோரத்தில் பாழடைந்த வளவொன்றினுள் இந்தக் கைக்குண்டு காணப்பட்டதாகப் பொலிஸார் கூறினர்.

அப்பகுதியில் நடமாடிய மீனவர்களின் கண்ணில் ,இக்கைக்குண்டு தென்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் அருகிலுள்ள கடற்படையினரின் காவற்சாவடிக்கு அறிவித்ததை தொடர்ந்து மட்டக்களப்பு கல்லடியிலுள்ள குண்டு செயலிழக்கச் செய்யும் படையினரும் ஏறாவூர் பொலிஸாரும் இணைந்து கைக்குண்டை மீட்டெடுத்து நேற்று மாலை அதனை செயலிழக்கச் செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X