2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

எருமைகளுடன் கைதானவர்களுக்கு பிணை

Menaka Mookandi   / 2014 மார்ச் 20 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு ஓட்டமாவடிப் பிரதேசத்தில் ஏழு எருமை மாடுகளுடன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூவரும் ஐம்பது ஆயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
 
சட்டவிரோதமான முறையில் அறுவைக்காக எருமை மாடுகளை மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.ஜ.எம்.றிஸ்வி முன்னிலையில் செவ்வாய்கிழமையன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபர்களை தலா ஐம்பதினாயிரம் ரூபாய் காசுப் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அத்துடன் கைப்பற்றப்பட்ட மாடுகளை அறுவைக்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை செய்ததுடன், அவற்றை விடுவிக்குமாறும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X