2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பூசகரின் வீட்டில் கைக்குண்டு

Super User   / 2014 மார்ச் 20 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட புதுமண்டபத்தடி வீடொன்றிலிருந்து  இன்று (20) மாலை கைக்குண்டொன்றை  கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் புதுமண்டபத்தடி பிரதேசத்தை சேர்ந்த கோயில் பூசகரான தர்மரெட்ணம் சந்திரகுமார் (28)  அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலின் அடிப்படையிலேயே மேற்படி பூசகரின் வீட்டைச் சோதனையிட்ட போது இந்தக் கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X