2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலையில் கைகலப்பு: ஒன்பது மாணவர் படுகாயம்

Kanagaraj   / 2014 மார்ச் 21 , மு.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் இரு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த 4 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்கள் தடாலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

மதுபோதையிலேயே  இந்தத் தாக்குதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

தாக்கதலுக்கு பேனாக்கத்தி, மற்றும் மின் அழுத்தி என்பனவும் பாவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த ஒன்பது மாணவர்களில் ஏழு தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும் அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X