2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

டெங்கினால் உயிரிழந்த மாணவியின் வீட்டில் பரிசோதனை

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில்; டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்த மாணவியின் வீடு மற்றும் சுற்றுப்புறச்சூழல் அந்த மாணவி கல்வி கற்ற பாடசாலை என்பன  வியாழக்கிழமை(21) சுகாதார அதிகாரிகளினால் பரிசோதணை செய்யப்பட்டன.

புதிய காத்தான்குடி பிர்தௌஸ் நகரைச் சேர்ந்த 9 வயதுடைய எஸ்.பாத்திமா சம்ஹா எனும் மாணவி வியாழக்கிழமை(20)யன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார்.

இந்நிலையில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் மேற்பார்வை சுகாhர பரிசோதகர் ஐ.எம்.றபீக் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகரான ஏ.எல்.றஹ்மத்துல்லா ஆகியோர் இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இந்த பகுதியில் டெங்கு நுளம்புகளை இல்லாமல் செய்யும் புகையம் விசிறப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X