2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சமூகத்துக்கிடையிலான பிரச்சினைகளை இனங்காணுதல்

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

சமூகத்துக்கிடையிலான பிரச்சினைகளை இனங்காணுதல் என்ற தலைப்பிலான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  வியாழக்கிழமை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தேசிய நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ரஜீவ விஜயசிங்க  உதவி பிரதேச செயலாளர், காத்தான்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கிராம மட்டத்தில் எதிர்நோக்கப்படும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்ப்பதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் இதன்போது தொடர்பிலும் ஆராயப்பட்டன.

சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் திட்டத்தினை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X