2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இருவருக்கு வகுப்புத்தடை: மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானம்

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், க.ருத்திரன்

 கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக விடுதி சம்பவம் தொடர்பில் மாணவர் இருவருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் விடுதியில் தங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் தங்கியிருந்த இரு மாணவ குழுக்களிடையே வெள்ளிக்கிழமை(21) அதிகாலை இடம்பெற்ற மோதலில் 10 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் வகுப்புத்தடை விதித்துள்ளதுடன் அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  அடுத்த இரு வாரங்களுக்கு வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட தீமானித்துள்ளதாக  கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக தமிழ்மொழி  மூல மாணவர்கள் அறவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்திற்கு எதிரொலியாக இன்று காலை முதல் பல்கலைக்கழக பேரவைக் கட்டடத்திற்கு முன்னால் தமிழ் மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்தையில் உரிய பதில் எட்டப்படாமையினாலேயே தாம் இந்த வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா,

'பொலிஸாரை அகற்றுவது மற்றும் பல்கலைக்கழக விடுதி வளங்களை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக உடனடியாக எந்த தீர்வுக்கும் வரமுடியாது. இது விடயமாக உரிய அதிகாரிகளிடம் பேசுவதற்காக கால அவகாசம் தேவை.

ஆனால் முதலாம் வருட மாணவர்களை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு மாணவர்களுக்கும் வகுப்புத்தடை மற்றும் விடுதியில் தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த இரண்டு மாணவர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது' என்றார். 

தொடர்புடைய செய்தி

கிழக்குப் பல்கலையில் கைகலப்பு: ஒன்பது மாணவர் படுகாயம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X