2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாரம்பரிய உணவுப்பொருட்களின் கண்காட்சி ஆரம்பம்

Kogilavani   / 2014 மார்ச் 21 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


பாரம்பரிய உணவுப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(21) ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய மற்றும் பறங்கிய இனங்களின் பாரம்பரிய உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பாரம்பரிய உணவுப்பொருட்களின் மகத்துவம் பற்றி எதிர்காலச் சந்ததியினருக்கு தெளிவுபடுத்தும் நோக்கோடு இக்கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டள்ளதாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எஸ். மலர்செல்வன் தெரிவித்தார்.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் மற்றும் உதவி அரசாங்க அதிபர் எஸ்.ரங்கநாதன் ஆகியோர் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இக்கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கழமை (23) வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X