2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிழக்குப் பல்கலை தாக்குதல்: மாணவன் கைது

Kanagaraj   / 2014 மார்ச் 21 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
கிழக்குப் பல்கலைக்கழக முதலாம் வருட தமிழ் மொழி மூல மாணவர்களை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சிரேஷ்ட மாணவர் ஒருவர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கலகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மாணவர்களையும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக  உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் உறுதியளித்திருந்த நிலையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் பொலிஸார் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம் குறித்த பின்னணி பற்றி விசாரணை செய்து வருவதாகக் குறிப்பிட்டனர்.

இதேவேளை கைது செய்யப்பட்ட சிரேஷ்ட மாணவரிடமும் ஏனைய மாணவர்களிடமும் விசாரணைகள் தொடர்கின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பல்கலைக் கழக மட்டக்களப்பு வந்தாறுமூலை  வளாகத்தில் தங்கியிருந்த  தமிழ் பேசும் மாணவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பெரும்பான்மை இனத்தைச்தேச்ந்த சிரேஷ்ட மாணவர்கள் இருவருக்கும் வகுப்புத் தடையும் விடுதியில் தங்கிருப்பதற்கான தடையும் ஏற்கெனவே விதிக்கப்பட்டு விட்டதாக உபவேந்தர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X