2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மூன்று சகோதரர்களையும் விடுமாறு கதறி அழுதேன்

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்.
இராணுவத்தினரின் காலில் விழுந்து எனது 3 சகோதரர்களையும் விடுமாறு கதறி அழுதேன் விசாரணையின் பின்பு விடுதலை செய்கிறோம் என்று கூறி அழைத்துச் சென்றார்கள் இதுவரை எனது சகோதரர்களை விடவில்லை,என 1990.08.02 இல்  காணமற் போனவர்களான வீரபத்திரன் பொன்னுத்துரை (30), வீரபத்திரன்அருள்நாதன் (22), வீரபத்திரன் சசிதரன் (15), ஆகியோரின் சகோதரியான சேர்மன் வீதி முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த வீரபத்திரன் சாந்தா (50) என்பவர் வெள்ளிக்கிழமை(21) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்;சியமளித்தார்.

அவர் தொடர்ந்து சாட்;சியமளிக்கையில் கண்ணீர் மல்க கூறியதாவது......

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினர் முறக்கொட்டான்சேனை பாடசாலை வளவிலும்; அதனைச் சுற்றியுள்ள சில காணிகளிலும் முகாமிட்டிருந்தனர். ,இதில் எங்களது வீடும் அடங்கும்; அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சத்தின் காரணமாக இடம்பெயர்ந்து பாதுகாப்பிற்க்காக சித்தாண்டி முருகன் கோயிலில் தஞ்சம் அடைந்திருந்தார்கள்.

அப்போது அவ்விடம் ஒரு அகதி முகாமாகவே காணப்பட்டது. ஊரில் இருந்த பல பேர் இவ் அகதி முகாமிலேயே தங்கியிருந்தார்கள்.
அங்கு சென்று சில நாட்களில் இராணுவத்தினர் முகாமை  சுற்றி வளைத்து அங்கு கொண்டுவரப்பட்டிருந்த முகமூடி பொம்மையாக இருந்தவரிடம் ஒவ்வொருவராக காட்டி எனது சகோதரர்கள் 3போகள்; உட்பட எல்லாமாக 17 பேரை அழைத்துக்கொண்டு சென்றனர். எனது சகோதரர்கள் எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லாதவர்கள் அவர்களை விடுதலைசெய்யுமாறு காலில் விழுந்து அழுதேன். அவர்கள் இரக்கம் காட்டவில்லை என்று கதறி அழுதார்.

கொழும்பு,களுத்துறையிலுள்ள பல சிறைச்சாலைகளுக்கும்; சென்று தேடி அலைந்தோம்.எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.எங்கு சென்று கேட்டாலும் இல்லையென்று கூறினார்கள்.

அண்;மையில் முறக்கொட்டான்சேனை முகாமில் இருந்து எமது வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் உங்களது சகோதரர்களின் பிறப்பு சான்றிதழ்க்களை தருமாறும் அவர்ளை தேடித்தருவதாகவும் கூறியிருந்தார்கள். வன்செயலில் பழுதடைந்து விட்டதாக அவர்களிடம் தெரிவித்தோம்.

எனது சகோதரர்கள் இரண்டு பேர் கல்வி கற்றுக்கொண்டிருந்தார்கள்.மூத்த சகோதரர் தேனீர் கடை வைத்திருந்தார். எனது சகோதரர்கள் எப்போது வருவார்கள் என்று  அம்மா எதிர்பார்புடன் உள்ளார். எனது தந்தை இவர்களின் நினைவால் ஏக்கத்துடன் இறந்துவிட்டார் என சாந்தா தெரிவித்துள்ளார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X