2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டமாவடி சிறுவர் பூங்கா திறப்பு.

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.

ஓட்டமாவடி பிரதேச சபையினால் அமீர் அலி விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா வெள்ளிக்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் ஆர். தர்மலிங்கம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

புறநெகும திட்டத்தில் 18 லட்சம் ரூபா செலவில்  அமைக்கப்பட்டுள்ள இச் சிறுவர் பூங்கா வாரத்தின் வெள்ளி, சனி ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திறந்திருக்கும் என பிரதேச சபையின் தவிசாளார் கே.பி.எஸ்.ஹமீட் தெரிவித்தார்.
 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X