2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலிருந்து பாலர் பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு கண்டி நோக்கி சுற்றுலா சென்ற பஸ் மெதகஸ்நுவர எனுமிடத்தில் இன்று (22)  குடைசாய்ந்ததில் 3மாணவர்கள் மற்றும் 3 பெற்றார்கள் அடங்கலாக 6 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகி அருகிலுள்ள வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன
.
புதிய காத்தான்குடியிலுள்ள மில்லத் பாலர் பாடசாலை மாணவர்கள் பெற்றோர் பாலர் பாடசாலை நிருவாகத்தினர் உட்பட 120 பேர் அடங்கலாக இரண்டு பஸ் வண்டிகளில் கண்டி நோக்கி சுற்றுலா சென்ற போது ஒரு பஸ் வண்டி மெதகஸ்நுவர எனுமிடத்தில் வைத்து குடை சாய்ந்துள்ளது. இதன் போது பஸ் மரங்களில் சிக்கியுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X