2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மெய்வல்லுனர் உடல்நல திறனாய்வு போட்டிகள்

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட். நாற்பதுவட்டை விபுலாநந்தா வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் உடல்நல திறனாய்வு போட்டிகள் புதன்கிழமை (07) வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

அதிபர் செ.பரா அவர்களின் தலைமையில்  இடம்பெற்ற இவ்விளையாட்டு போட்டியில், மாவூதி காசெடுத்தல், அணிநடை, உடற்பயிற்சி கண்காட்சி, அஞ்சல் ஓட்டம் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீர, வீராங்கணைகளுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், வலய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்டத்திற்கு செல்ல இருக்கின்ற பெண் கிறிக்கட் அணி வீரர்களுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஞா.ஸ்ரீநேசன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், ஆசிரிய ஆலோசகர்கள், கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள், தாந்தாமலை பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X