2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இடிந்து விழும் அபாய நிலையில் கன்னன்குடாப் பாலம்

Super User   / 2014 மே 11 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கன்னன்குடாப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கனரக வாகனங்க செல்ல முடியாதுள்ளதுடன் சாதாரண வாகனங்களும் பயணிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.

குறிஞ்சாமுனை கன்னன்குடாப் பிரதான வீதியில் உள்ள இப் பாலத்தினால் கன்னன்குடா, கரையாக்கந்தீவு, மண்டபத்தடி போன்ற கிராமங்களுக்கச் செல்ல வேண்டியுள்ளதுடன் இப் பகுதியில் உள்ள 4 பாடசாலைகளுக்கும் மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பாலத்தின் ஊடாக செல்லவேண்டியுள்ளது.

இதே வேளை மட்டக்களப்பிலிருந்து கரையாக்கந்தீவிற்கான பேருந்துச் சேவையும் கன்னன்குடா மகாவித்தியாலயம் வரையான பேருந்துச் சேவையும் இடம்பெறுகின்றது.

இப் பாலம் சேதமடைந்து இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளதனால் இப் பேருந்துச்சேவை நிறுத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தடவை இப் பாலத்தின் மேற் பகுதி சேதமான நிலையில் மேற்பகுதிக்கு கொங்றீற் இட்டு செப்பனிட்ட நிலையிலேயே மிண்டும் சேதமடைந்துள்ளது.

இப் பாலமானது மேற்பகுதி சேதமடைந்த நிலையில் நீரினுள் உள்ள தூண்களும் சிதைவடைந்து காணப்படுவதனால் எப்போதும் இடிந்து விழுக் கூடிய அபாய நிலை உள்ளதனால் இடிந்து விழும் போது இடம்பெறும் பாதிப்பினையும் சேதத்தினையும் தவிர்ப்பதுடன் இப் பகுதி மக்களின் நலனினையும் கருத்தில் கொண்டு இப் பாலத்தினை திருத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


கன்னன்குடாப் பாலம் திருத்தப்படாமையினால் பயணிகள் சிரமம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X