2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 13 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்.


வாழ்வின் எழுச்சி(திவிநெகும) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் பயனாளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(13) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் யெலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரி.சிவஞானசோதி திட்ட விளக்க உரையை நிகழ்த்தினார். அதே நேரம் சிறப்புரையினை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் நிகழ்த்தினார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் பனை அபிவிருத்தி சபை, தெங்கு அபிவிருத்தி சபை என்பவை இணைந்து இந்த தொழில் முயற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

பனை மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைகள் இணைந்து வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் இன்றைய தினம் 174 பேருக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X