2025 மே 02, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு நடமாடும் சேவை

Kogilavani   / 2014 மே 19 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


'மகிழ்ச்சியான குடும்பம் ஆரோக்கியமான சமூகம்' என்ற தொனிப் பொருளின் கீழ் சிறுவர் துஷ்;பிரயோக தடுப்பதற்கான விழிப்புணர்வு நடமாடும் சேவை ஒன்றினை மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) நடாத்தவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கமும் (வை.எம்.சீ.ஏ) மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மற்றும் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுவுடன் இணைந்து இதனை நடத்துகின்றது.

இந்நடமாடும் சேவையின் மூலம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான அங்கவீனமுற்ற சிறுவர்கள், மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்துவதற்கான செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும்; எதிர்வரும்  ஜுன் மாதம் 5ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இன்றயத்தினம் திங்கட்கிழமை (19) மண்முனை வடக்குப் பிரிவில் காந்தி சதுக்கத்திலும், 20 ஆம் திகதி மண்முனைப் பற்று பிரிவில் தருமபுரத்திலும், 21 ஆம் திகதி போரதீவுப்பற்று பிரிவில் விவேகானந்த புரத்திலும்,  22 ஆம் திகதி மண்முனை தென் எருவில் பற்றில் மகிழூரிலும், 23 ஆம் திகதி மண்முனை மேற்குப் பிரிவில் கொத்தியாபுலையிலும், 26 ஆம் திகதி மண்தென்மேற்குப் பிரவில் பட்டிப்பளையிலும், 27 ஆம் திகதி காத்தான்குடி கடற்கரையிலும், 28 ஆம் திகதி ஏறாவூர் நகரிலும், 29 ஆம் திகதி ஏறாவூர் பற்றின் களுவன்கேணியிலும், 30 ஆம் திகதி கிரான் பிரிவின் திகிலிவட்டையிலும், ஜுன் 2 கோறளைப்பற்று பிரிவின் இந்துக் கல்லூரியிலும்,  3.ஆம் திகதி கோறளைப்பற்று மேற்கிலும்,  4 ஆம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரிவில் றிதிதென்னையிலும்,  5 ஆம் திகதி   கோறளைப்பற்று வடக்குப் பிரிவின் வாகரை வடக்கிலும்  இந்நடமாடும் நடாத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கம் (வை.எம்.சீ.ஏ) தெரிவித்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X