2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பாலமுனை மாணவர்களுக்கு சாரணியர் சின்னம் சூட்டப்பட்டது

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி கல்விக் கோட்டத்துக்குட்பட்ட பாலமுனையைச் சேர்ந்த 16 மாணவர்களுக்கு சாரணியருக்கான சின்னங்கள் செவ்வாய்க்கிழமை (27) சூட்டப்பட்டன. இந்த சின்னம் சூட்டும் வைபவம் பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் சாரணியர் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் பி.ஆனந்தராஜா, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர், பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.ஹைறுல்லாஹ், சாரணியர் இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எம்.முஹ்சின், பாலமுனை அஸ்ரப் வித்தியாலயத்தின் சாரணியர் தலைவர் எம்.அப்துர் றஹ்மான், மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.முபாறக் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, சாரணியர் இயக்கத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு சாரணியர் சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் சாரணியர் கழுத்துப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டு சத்தியப்பிரமாணமும் செய்யப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X