2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினை பார்வை

Kogilavani   / 2014 ஜூன் 19 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினை நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர்  தலமையிலான குழுவினர் புதன்கிழமை(18) சென்று பார்வையிட்டுள்ளனர். 

யுனெப்ஸ் நிறுவனம் மற்றும் பிலிசற நிறுவனம் என்பவற்றின் அனுசரணையுடன் காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு திண்மக்கழிவு முகாமைத்துவத்தின் மூலம் பசளை தயாரிக்கும் நடவடிக்கை இதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பிலிசற நிறுவனத்தின் நிதியனுசரணையுடன் யுனெப்ஸ் நிறுவனத்தினால் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது இத்திட்டம் சிறியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இதை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் இதன்போது தெரிவித்தார்.

எதிர்காலத்தில் காத்தான்குடியில் திண்மக்கழிவு தொடர்பில் காத்தான்குடி நகரசபை எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியுமெனவும் திண்மக்கழிவு முகாமைத்தவத்தின் ஊடாக பசளை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நகரசபை உறுப்பினர்களான எச்.எம்.எம்.பாக்கீர் மற்றும் எம்.அலிசப்ரி மற்றும் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் எஸ்.சர்வேஸ்வரர் உட்பட அதன் உத்தியோகத்தர்களும் இதன்போது சென்றிருந்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X