2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

முஸ்லிம்களை பாதுகாக்க இறைவனே: சல்மா ஹம்ஸா

Suganthini Ratnam   / 2014 ஜூலை 24 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


முஸ்லிம்களை பாதுகாப்பதற்கு  இறைவனைத் தவிர வேறு எவருமில்லையென  பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான ஜனாபா சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள அலுவலகத்தில்    நேற்று புதன்கிழமை (23) நடைபெற்ற பெண்களுக்கான இப்தார் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'பலஸ்தீன் காஸாவில் முஸ்லிம்கள் மீது இஸ்ரேலியர்கள் நடத்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்களாகிய நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். இந்தத் தாக்குதல்களினால் எதுவுமறியாத அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளன.
அதேபோன்று பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், தற்போதும் கொலை செய்யப்படுகின்றனர்;.

இதை தட்டிக் கேட்பதற்கு முஸ்லிம்களுக்கு எவரும்  கிடையாது. இந்நிலையில், இறைவனைத் தவிர எவராலும்; முஸ்லிம்களை பாதுகாக்க முடியாது. எனவே, இறைவனிடம் நாம் பிரார்த்திக்க வேண்டும். இந்த புனிதமான றமழான் மாதத்தின் சிறப்புமிகு இந்த நாட்களில் காஸா முஸ்லிம்களுக்காக நாம் பிரார்த்தனை  செய்ய வேண்டும். ஒவ்வொரு தொழுகையின்போதும்; இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். வேறு எக்காரணங்களுமின்றி முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக  இன்று முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். எமது சகோதரர்களுக்காக  நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X