2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

விபத்து : பெண் உட்பட இருவர் காயம்

George   / 2014 ஜூலை 26 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனையில் இன்று சனிக்கிழமை (26) பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்னொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பதுளைவீதி - கோப்பாவெளியில் வசிக்கும் முருகுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை (வயது 48 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்ப்டுள்ளார். வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும்போது முச்சக்கர வண்டி வீதியருகில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. அதன்போது வீதியில் வந்து கொண்டிருந்த சைக்கிளையும் முச்சக்கர வண்டி மோதியுள்ளது.

இதனையடுத்து சைக்கிளை செலுத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X