2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மட். மஹாஜன மகளிர் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜூலை 27 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியில் புதிய தொழில்நுட்ப பாட பிரிவை ஆரம்பிக்க கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரில் புதிய தொழில்நுட்ப பாட பிரிவை ஆரம்பிப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஒரேயொரு மகளிர் கல்லூரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் மகளிர் கல்லூரயின் அதிபர் நேசலெட்சுமி துரைராஜசிங்கம் தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியில் புதிய தொழில்நுட்ப பாடத்துறையை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்விப் பணிப்பாளர்களின் சிபாரிசுடன் கல்வியமைச்சுக்கு விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை ஆரம்பிக்க கல்வியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் இந்தப் பாடசாலையின் மாணவிகள் முதன் முறையாக உயர்தர பிரிவில் புதிய தொழில்நுட்பத்துறையில் காலடி எடுத்து வைக்க அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது.

முதற்கட்டமாக இப்பிரிவுக்கு இக்கல்லூரியின் 30 இற்கு மேற்பட்ட மாணவிகள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

மேலும், ஏனைய பிரபல பாடசாலைகளிலிருந்தும் மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது'

அண்மையில் வெளியான கல்வி பொதுத்தர சாதாரணதர பெறுபேற்றின் அடிப்படையில் மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 100 வீதமான மாணவிகளும் உயர்தரம் கற்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே மட்டக்களப்பு மஹாஜன மகளிர் கல்லூரியில் சகல வசதிகளுடனும் கூடிய மஹிந்தோதைய ஆய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X